சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர். இந்தியாவில் மே தினத்தை முதல் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர். மாபெரும் சுதந்திரப்போராட்ட வீரர்.

Tuesday, February 12, 2008

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரை பயில்வோம்

1923 மார்ச் 1ம் நாள் கயாவில் காங் கிரஸ் கட்சியின் மாநாடு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. மாநாட்டு மேடையில் பேசிய ஒருவர் ‘தோழர்களே’ என விளித்து தன் உரையைத் துவங்குகிறார். மாநாடு கைதட்டலால் அதிர்கிறது. மாநாட்டுக்கே புதுரத்தம் பாய்ச்சிய வேகம் கிடைக்கிறது. அந்த மாநாட்டின் நிகழ்ச்சியை ‘வேன் கார்டு’ இதழில் எம்.என்.ராய் விவரிக் கிறார்,“பல்வேறு சிந்தனைப் போக்குகள் கொண்டவர்கள் வந்திருந்த கயா காங் கிரஸ் மாநாட்டில், சிங்காரவேலர் பங்கு கொண்டது வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்ச்சி யாக நினைக்கப்படும். மரியாதைக்குரிய இன்றியமையாத தலைவர்கள் என்னும் மேன்மை பறிபோய்வி டுமோ, அல்லது அரசு நடவடிக்கைகள் எடுத்துவிடுமோ என்று இளம் இரத்தங்கள் நடுங்கிக் கொண்டிருந்த வேளையில், இந்த அறுபது வயதுக்கு மேற்பட்ட வெண்தாடி வேந்தர் வெளிப்படையாகத் தன்னை, ஒரு `கம்யூனிஸ்டு’ என அழைத்துக் கொண்ட துணிச்சலை மாநாட் டில் இருந்தவர்கள் வியந்து பாராட்டி யிருக்க வேண்டும்.”அந்த முதியவர் வேறு யாரும் அல்ல. நம் முடைய சிங்காரவேலர்தான். அம்மாநாட்டில் அவர் பேசுகிறபோது தான், இந்தியாவுக்கு ‘பூரண சுயராஜ்யம்’ வேண்டும் என்று முதன்முதலாக பகிரங் கமாக அறிவித்தார். அதன் பிறகு தொழி லாளிவர்க்கம் தொடர்ச் சியாக எழுப்பியது. லக்னோ மாநாட்டில் தான் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.சென்னையில் சாதாரண மீனவர் குடும் பத்தில் பிறந்தவர். தன்னுடைய விடா முயற் சியால் சட்டம் பயின்றவர். இளமை யிலேயே தத்துவத்தின் மீதும், சமூகத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். அந்த மீனவர் குப்பத்தில் மீனவர்களுக் கிடையே நிலவிய சாதி வேறுபாட்டை மீறி கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். சாதி, மதம், மூடநம்பிக்கை இவை குறித்து ஆழமாக சிந்தித்து வந்தவர். அதன் காரண மாகவே புத்த மதத்தின் மீது ஆர்வம் காட் டியவர். நண்பர்களோடு சேர்ந்து மகாபோதி சங்கம் என்கிற பெயரில் புத்தமதப் பிரச் சாரத்தை செய்து வந்தவர். அது குறித்து தமிழ்த் தென்றல், திரு.வி.க. அவருடைய வாழ்க்கை வரலாற்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள் ளார்.“கோமளீஸ்வரன் பேட்டை புதுப் பேட்டையில் ஒரு பௌத்த சங்கம் கூடிற்று. அதிலே லட்சுமணராசு நாயுடு, சிங்கார வேலு செட்டியார் முதலியோர் பேசுகின் றனர். சிங்கார வேலு செட்டியார் டார் வின் கொள்கையை அழகு தமிழில் விளக்கினார். என் உள்ளம் அதில் ஈடு பட்டது. கலகம் செய்யப் போயிருந்தநான் டார்வின் வகுப்பு மாணவனானேன். செட்டியார் எனக்கு ஆசிரியர் ஆனார்.”தொடர்ந்து தத்துவ ஆய்விலும், அறி வியல் ஆய்விலும், அரசியல் போராட்டத்தி லும் தன்னை இரண்டற கரைந்து நின்றார். பல்வேறு தொழிலாளர் போராட்டங் களுக்கு தலைமை ஏற்றார். 1923ம் ஆண்டு முதன் முதலாக சென்னை கடற்கரையில் மே தினம் கொண்டாடி இந்திய வரலாற் றில் என் றும் அழியாத புகழ் முத்திரையைப் பதித்தார். கான்பூரில் நடந்த கம்யூனிஸ்ட் அமைப்பு மாநாட்டில் கலந்து கொண் டார். அதற்காக கான்பூர் சதி வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். வயது, உடல் நிலை காரணமாக விடு விக்கப்பட்டார். தென்னிந் தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்கிற பெருமையைப் பெற்றார். 1923ம் ஆண்டு லேபர் கிசான் கெசட் கட்சியை துவங் கினார். அதே பெயரில் பத்திரிகையும் துவங்கினார்.அன்றைய காலத்தில் மார்க்சிய நூல்கள் நம் நாட்டுக்குள் வருவது அவ்வளவு சுலப மல்ல. நிறைய தடை இருந்தது. ஆயினும், தன்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் மூலம் பாண்டிச் சேரி வழியாகவோ அல்லது கேரள கடற்கரை வழியாகவோ அவற்றை கொண்டு வந்தார். பெரும் பாலும் நேத்திரங்காய் வறுவல், கருவாட்டு பொட்டலங்களுக்கு நடுவே மார்க்சிய புத்தகங்களை, அறிவியல் புத்தகங்களை மறைத்துக் கொண்டு வந்து படித்தவர். மாபெரும் அறிஞராக இவர் திகழ்ந் தபோதிலும் அன்றைய காலகட்டம் என் பது மேல் சாதிக்காரர்களின் ஆதிக்கம் மிகுந்த காலம். ஒரு நாள் நீதிமன்றத்தில் இவர் வழக்காட சென்றபோது, சக பிராமண வழக்கறிஞர்கள் இவரை பார்த்து ‘நீயெல் லாம் பறியோடு இருக்க வேண்டியவன். இப்போது சட்டப்புத்த கங்களை பையிலே வைத்துக் கொண்டு வருகிறாய்; உன் போன்றவர்களுக்கு பழக்கமானது பறி தானே’ என நையாண்டி செய்தனர். மறு நாள் நீதிமன்றத்திற்கு தலையில் பறியை (மீன்கள் விற்பதற்கு எடுத்துச் செல்லும் ஓலைக்கூடை) சுமந்தபடி வந்தார். பறியை கீழே இறக்கியபோது அது நிறைய சட்ட புத்தகங்களும், அறிவியல் புத்தகங்களும் நிறைந்தி ருந்தன. கேலி செய்தவர்கள் வாயடைத்தனர்.வாயடைப்பதற்காக வெறுமே காட்சிப் பொருளாக கொண்டுவந்த வரல்ல சிங்கார வேலர். உண்மையில் அன்றைய உலகில் அதுவரை வெளி வந்த அறிவியல், வரலாறு, தத்துவம், அரசியல் என அனைத்துப்புத்தகங் களையும் படித்தவர். அதனை அறிவி யல் நோக்கோடு புரிந்துகொண்டவர். தான் புரிந்து கொண்டதோடு நில்லா மல் தமிழ் சமூகம், உழைப்பாளி மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அவற்றை கட்டுரைகளாக பல்வேறு ஏடுகளில் எழுதி வந்தவர்.பெரியாரின் சுயமரியாதை இயக்கத் தோடும் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். பெரியாரின் குடியர சுப் பத்திரிகையில் தொடர்ச்சியாக சமூக சீர்திருத்த கருத்துக்களை அறி வியல் பார்வையோடு எழுதி வந்தவர். ஈரோட்டு திட்டமென பொதுவுடை மையை மையப் படுத்திய திட்டம் பெரியார் தந்தார். அதன் பின்னணியில் செயல்பட்டவர்களில் சிங்கார வேலர் முதல் இடத்தை பெறுவார். பெரியார் சமூக விடுதலையை மட்டுமே முன் னிலைப்படுத்த துவங்கினார். இந்நிலையில் பெரியாரோடு மாறுபட்டு ‘சுயமரியாதை இயக்கமா? அவமரி யாதை இயக்கமா?’ என சீறியவர் சிங்கார வேலர். ஆயினும், சிங்கார வேலரின் அளவற்ற புலமை கண்டு அவரை தன் ஏட்டில் தொடர்ந்து எழுத பெரியார் அனுமதித்தார். சிங்காரவேலர் தன் வீட்டில் அர சியல் மானிடவியல், உளவியல், தத்து வம், பொருளியல், பொது அறிவியல் என பல்வேறு தலைப்புகளில் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேக ரித்து வைத்திருந்தார். அந்த நூலகத் தை குறித்து அமீர் ஹைதர்கான் கூறு வார், ‘தென் இந்தியாவிலேயே தனி ஒருவர் நூலகங்களில் மிகப்பெரிய நூலகம் சிங்கார வேலர் இல்லத்து நூலகமே’ அது மட்டுமல்ல. சிங்கார வேலர் சேகரித்த நூல்களில் ஒரு பகுதி ரஷ்யாவில் உள்ள பெரிய நூலகமான லெனின் நூலகத்தில் ‘சிங்கார வேலர் நூலகம்’ என்ற பிரிவில் இன்றும் உள்ளது. குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, புதுவை முரசு, புது உலகம், தி ஹிண்டு உட்பட பல ஏடுகளில் 1921 முதல் 1936 வரை கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் சமதர்மி, தோழர், அப்சர்வர், எமினென்ட் லாயர், இமாலய தவசி, யூக வாதி, சிந்தனா வாதி, சோசலிஸ்ட், சயிண் டிஸ்ட், யுக்திவாதி, முகமூடி போன்ற புனைப் பெயர்களில் அரசியல் தத்துவக் கட்டுரைகளை எழுதினார். தலை சிறந்த விஞ்ஞானிகளை அறிமுகப் படுத்தினார். அறிவியல் கொள்கை களை விளக்கினார். அவருடைய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் இன்று படித்தாலும் நம் சிந்தனையை கூர்மைப் படுத்தும், மெருகேற்றும்.அவர் தன் வாழ்நாள் முழுவதும் பேசியதையும், எழுதியதையும் தொகுத்து மூன்று தொகுதிகளாக 199 கட்டுரை களாக இப்போது வெளியிட் டிருக்கிறார்கள். அவற்றை இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண் டும். ஏனெனில் மார்க்சிய-லெனினிய சித்தாந்த கோட்பாடுகளை எளிய தமிழில் அன்றே தந்துள்ளார். அறிவிய லின் கொடுமுடி மார்க்சியமே என் பதை ஐயம்திரிபற உணர்ந்தவர். அதே நேரத்தில் மார்க்சியம் “வறட்டுத் திண்ணை வேதாந்தமாகிவிடக் கூடாது” என்கிற அக்கறையோடு அறிவியல் துணையோடு தமிழக மண் ணுக்கு ஏற்ப அதை பிசைந்து தந்தவர்.சிங்கார வேலர் நமது முன்னோடி. நமது வழிகாட்டி. அவரை மீண்டும் மீண்டும் பயில்வது என்பது லட்சியப் போருக்கு நம்மை நாமே தயார்ப் படுத்திக் கொள்ளும் பயிற்சியே தவிர வேறல்ல.விடுதலை அடைந்து 60 ஆண்டு கள் கடந்த பின்னும் பட்டினிக் கொடுஞ் சிறையில் பரிதவிக்கும் இந்தியாவை மாற்றி அமைத்திட; சிவந்த இந்தியாவை படைத்திட-சரியாக வியூகம் சமைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு கூடும் வேளை. இன்றும் சிங்கார வேலர் உயிர்த் துடிப்புடன் நமக்கு வழிகாட்டுகிறார்.அவரது படைப்புகள் மூலம் தொடர்ந்து எட்டு நாட்கள்(பிப்.11 நினைவு நாள்-பிப்.18 பிறந்த நாள்) இங்கு தொடர்ந்து அவரது சிந்தனை களை பயில்வோம். அது நமக்கு பயன் தரும் வழியை காட்டும்.
- சு.பொ.அ

Labels:

0 Comments:

Post a Comment

<< Home